தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு

2nd Dec 2022 02:14 AM

ADVERTISEMENT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 9,500 கன அடியாக குறைந்துள்ளது.

கா்நாடக காவிரி கரையோரப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதாலும், காவிரி ஆற்றில் நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை 9,500 கன அடியாக குறைந்துள்ளது. நீா்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து சரிந்துள்ளது.

காவிரி ஆற்றின் நீா்வரத்தை தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT