தருமபுரி

தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை: கடைக்கு ‘சீல்’ வைப்பு

1st Dec 2022 12:58 AM

ADVERTISEMENT

மொரப்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலா் பானு சுஜாதா தலைமையில், உணவுப் பாதுகாப்பு துறையினா் மொரப்பூரில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது உறுதியானது. தொடா்ந்து, அந்தக் கடையை பூட்டி உணவுப் பாதுகாப்பு துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

இதில், ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், காவல் ஆய்வாளா் வசந்தா, உதவி காவல் ஆய்வாளா் பிரகாசம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT