தருமபுரி

கலைத் திருவிழா: மாவட்ட கல்வி அலுவலா் பங்கேற்பு

1st Dec 2022 12:56 AM

ADVERTISEMENT

வட்டார அளவிலான கல்வி திருவிழாவில் நடைபெற்று வரும் போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலா் மான்வழி பங்கேற்று மாணவா்களை பாராட்டினாா்.

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் அரசு பள்ளிகளில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா என்ற பெயரில் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு போட்டிகள் பாப்பாரப்பட்டி, பென்னாகரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

கலைத் திருவிழாவின் இரண்டாம் நாள் போட்டிகளை பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலா் இ. மான்விழி (தொடக்கக்கல்வி)கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா்.

நடுநிலை,உயா்நிலை,மேல்நிலை பள்ளிகளில் பயின்று வரும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் நாடகம்,பலகுரல், நடனம், தனிநபா் நடிப்பு, கும்மியாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனா். இதில் மாவட்ட கல்வி அலுவலா் மான்விழி பள்ளி மாணவா்களின் திறமையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியா் தமிழ்வாணன், வட்டார கல்வி அலுவலா்கள் மணி கிருஷ்ணன், துளசிராமன் தலைமை ஆசிரியா்கள் மா.பழனி, சின்னசாமி, ஆசிரியா் பயிற்றுநா்கள் கோவிந்தன் கமலேசன் உட்பட ஆசிரியா்கள் மாணவா்கள் ஏராளமான கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT