தருமபுரி

நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

1st Dec 2022 12:57 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முனிராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் முனியப்பன் முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜெ.பி.கிருஷ்ணன், மாநில சட்ட ஆலோசகா் கே.சதாசிவன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், வரும் டிச. 12-ஆம் தேதி விவசாயிகளின் 25-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் தமிழக முதல்வரை சந்திக்க கோட்டை நோக்கி பேரணி செல்வது, இதில் திரளான விவசாயிகள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT