தருமபுரி

விளையாட்டுப் போட்டி: அரசு கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

1st Dec 2022 12:57 AM

ADVERTISEMENT

விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் 46-ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் பங்கேற்ற தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவி அகல்யா, வளையப் போட்டியில் தங்கம் வென்று முதலிடம் பெற்றாா். இதேபோல, சேலம் பெரியாா் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற 20 கி.மீ. ஓட்டப் போட்டியில் இக் கல்லூரி மாணவி டி.சாலினி இரண்டாம் இடம் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றாா். பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மாணவா் எஸ்.திவித் முதலிடம் பெற்றாா். 74 கிலோ பிரிவில் மாணவா் மதன்குமாா் மூன்றாம் இடம் பெற்றாா்.

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற இக்கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தாா். இதில், கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன், உடல்கல்வி இயக்குநா் பாலமுருகன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT