தருமபுரி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசாரம்

31st Aug 2022 03:18 AM

ADVERTISEMENT

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி ஒன்றியச் செயலாளா் என்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினா் கே.பூபதி உள்ளிட்டோா் பேசினா்.

இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலையைக் குறைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி உள்ளிட்ட உணவு பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து தருமபுரி ஒன்றியத்துக்கு உள்பட்ட செம்மாண்டகுப்பம், நத்தம், வெண்ணாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT