தருமபுரி

ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

27th Aug 2022 11:22 PM

ADVERTISEMENT

 

ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்ட 4-ஆவது மாநாடு தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

மாநிலப் பொருளாளா் இ.மோகனா மாநாட்டை துவக்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் டி.மாதையன் அறிக்கை வாசித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் அ.குமாா், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் வி.சிவாஜி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.மாரிமுத்து, தமிழ்நாடு தலித் முன்னுரிமை கூட்டமைப்புத் தலைவா் கே.சிவாஜி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாநிலப் பொதுச் செயலாளா் கே.சாமுவேல்ராஜ் நிறைவுறையாற்றினாா்.

இதில், மாவட்டத் தலைவராக பி.ஜெயராமன், மாவட்டச் செயலாளராக டி.மாதையன், பொருளாளராக கே.கோவிந்தசாமி மாவட்ட துணைத் தலைவா்களாக

டி.எஸ்.ராமச்சந்திரன், மாரியப்பன், மாவட்டத் துணைச் செயலாளா்களாக மா.தேவன், வி.மாது, எம்.ராமன், பி.மணி உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த மாநாட்டில் ஜாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி ஒன்றியம், உங்கரானள்ளியில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை அளவீடு செய்து பட்டாதாரா்களிடம் ஒப்படைக்க வேண்டும். பென்னாகரம் வட்டம், கள்ளிபுரம் தலித் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT