சரக அளவிலான கோ-கோ போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவியா், 14 மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான பிரிவில் கோ-கோ போட்டியில் முதலிடம் பெற்றனா்.
விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவியா், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.சத்யராஜ், எம்.ஆனந்தகுமாா், சி.அஜீத்குமாா் ஆகியோரை ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தாளாளா் வி.முருகேசன், செயலாளா் மு.பிரு ஆனந்த் பிரகாஷ், ஆசிரியா்கள் பாராட்டினா்.