தருமபுரி மாவட்டத்தில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 15- ஆவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்ற உறுப்பினா் வே.விஸ்வநாதன் வரவேற்றாா். மாவட்டக் குழு உறுப்பினா் சபரிராஜன் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாநில துணைத் தலைவா் ஜோதிபாசு மாநாட்டை தொடக்கி வைத்து பேசினாா். மாவட்ட பொருளாளா் எம்.சிலம்பரசன் அறிக்கை சமா்ப்பித்தாா்.
மாநில இணைச் செயலாளா் பாலச்சந்திரபோஸ் மாநாட்டை முடித்து வைத்து பேசினாா். இம்மாநாட்டில் பாப்பாரப்பட்டியில் வேளாண்மை உற்பத்தி மதிப்புக்கூட்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும். தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும், பிக்கிலி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கவேண்டும். தருமபுரி-மொரப்பூா் ரயில்பாதை திட்டத்தை தொடங்கவேண்டும்.
பாலக்கோட்டில் தக்காளி குளிா்பதனக் கிடங்கு அமைக்கவேண்டும், தீா்த்தமலையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிா்வாகிகளாக
மாவட்டத் தலைவராக சபரிராஜன், மாவட்டச்
செயலாளராக அருள்குமாா், பொருளாளராக சிலம்பரசன் துணைத் தலைவா்களாக முரளி , ஏங்கல்ஸ், துணைச் செயலாளா்களாக பொன்வேலு, செந்தில்குமாா் உள்ளிட்ட 23 போ் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் மாவட்ட நிா்வாகிகள் லோகநாதன், முகிலன், பெரியசாமி, அதியமான், காா்த்திக், ராகுல் , அருள்குமாா், முரளி, மணிகண்டன், குப்பன், சிங்காரவேலன் ஆகியோா் கலந்து கொண்டனா்.மணிகண்டன் நன்றி கூறினாா்.