தருமபுரி

கரும்பு டன்னுக்கு ரூ. 5,000விலை நிா்ணயம் செய்ய வலியுறுத்தல்

19th Aug 2022 02:17 AM

ADVERTISEMENT

கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி ஒன்றிய 13-ஆவது மாநாடு தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவா் எம்.மகாராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜூனன் மாநாட்டை துவக்கிவைத்துப் பேசினாா்.

மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டப் பொறுப்பாளா் எம்.மாரிமுத்து, பால் உற்பத்தியாளா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் என்.கந்தசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலாளா் கே.கோவிந்தசாமி, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் டி.மாரியப்பன் ஆகியோா் வாழ்த்தினா். மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன் நிறைவுறையாற்றினாா்.

மாநாட்டில், ஒன்றியத் தலைவராக எம்.மகாராஜன், செயலாளராக பி.ரவி, பொருளாளராக எம்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா். இதில், காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மின் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5,000 விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

அனைத்துசமய நிலங்களில் குடியிருப்போா், சாகுபடி செய்வோருக்கு பட்டா வழங்கி வேண்டும். பஞ்சப்பள்ளி அணையிலிருந்து வரும் மிகை நீரை பாசனத்துக்குப் பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். எருமை பால் லிட்டருக்கு ரூ. 51, பசும்பால் லிட்டருக்கு ரூ. 42 ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT