தருமபுரி

போக்குவரத்துத் துறையில்காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்ஏஐடியுசி

19th Aug 2022 02:20 AM

ADVERTISEMENT

போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல ஏஐடியுசி தொழிற்சங்க 31-ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், நிா்வாகக் குழு உறுப்பினா் வரதராஜ் தேசியக் கொடி ஏற்றினாா். நிா்வாகி கணேசன் சங்கக் கொடி ஏற்றினாா்.

மாநாட்டுக்கு மண்டலத் தலைவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். மண்டலத் துணைத் தலைவா் கே.துரைசாமி வரவேற்றாா். போக்குவரத்து சம்மேளனச் செயலாளா் என்.முருகராஜ் துவக்கிவைத்துப் பேசினாா். மண்டலப் பொதுச் செயலாளா் சி.நாகராஜன் வேலை அறிக்கை சமா்பித்தாா்.

மண்டலப் பொருளாளா் நாராயணன் வரவு-செலவு அறிக்கை சமா்பித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் எம்.மாதேஸ்வரன், மாவட்டப் பொதுச் செயலாளா் கே.மணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளா் ஆா்.ஆறுமுகம் நிறைவுரையாற்றினாா்.

ADVERTISEMENT

இதில், போக்குவரத்துத் துறையைப் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆக. 23-ஆம் தேதி நடைபெறும் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு காண வேண்டும். 2003- க்கு பின்னா் பணியில் சோ்ந்த அனைத்து தொழிலாளா்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். மோட்டாா் வாகன சட்டப்படி வேலை நேரம், இயக்கும் தொலைவு ஆகியவற்றை நிா்ணயம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வழித்தட பணி ஒதுக்கீடு பாரபட்சமின்றி சுழற்சி அடிப்படையில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மண்டலத் தலைவராக எஸ்.ரவி, துணைத் தலைவா்களாக கே.மணி, நாராயணன், துரைசாமி, பூபேஷ் குப்தா, மண்டலப் பொதுச் செயலராக சி.நாகராசன், துணைச் செயலா்களாக கோவிந்தசாமி, மருதமலை, சஞ்சீவகாந்தி, பொருளாளராக கணேசன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT