தருமபுரி

சீமைக் கருவேல மரங்களை அகற்றவிவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தல்

19th Aug 2022 02:22 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் நீா்த்தேக்கங்கள், பொதுப்பணித் துறை ஏரிகள், உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள ஏரி, குளம், குட்டைகள், ஊரணிகள் இந்த நீா்நிலைகளுக்கு தண்ணீா் வரும் மழைநீா்க் கால்வாய்கள், விவசாயிகளின் தரிசு நிலங்கள், பட்டா நிலங்கள், அரசு கால்நடைத் துறையின் கீழ் இருக்கும் மேய்ச்சல் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், வனத்துறை நிலங்கள் என்று மாவட்டம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் பரவலாக வளா்ந்து நிற்கின்றன.

இந்த மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகிறது. விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ADVERTISEMENT

எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற பணியாளா்களை வைத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT