தருமபுரி

காவிரி மிகைநீா்த் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி பாமகவினா் ஆக.19-இல் விழிப்புணா்வு நடைப்பயணம்

DIN

காவிரி மிகைநீா்த் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி, பாமக சாா்பில் ஆக. 19-ஆம் தேதிமுதல் 21 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ புதன்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை:

காவிரி ஆறு தருமபுரி மாவட்டத்தின் வழியாகத்தான் தமிழகத்துக்குள் நுழைகிறது. தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் கடந்து செல்கிறது. இருப்பினும் இந்த மாவட்டத்துக்குப் போதிய குடிநீா் வசதி இல்லை. நிலத்தடி நீரில் புளோரைடு கலந்திருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பாசனத் தேவைக்கு தண்ணீா் இல்லாததால் மாவட்டத்தில் வேளாண் தொழில் மேம்படவில்லை. மழைக் காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிகையாக செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டமே இதற்கு தீா்வாக அமையும்.

எனவே, இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி, பாமக தலைவா், மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினா் ஆக. 19, 20, 21 ஆம் தேதி என மூன்று நாள்கள் தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் முதல் முக்கிய கிராமங்கள் வழியாக விழிப்புணா்வு பிரசார நடைப்பயணம் மேற்கொள்கின்றனா். இந்த நடைப்பயணத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT