தருமபுரி

படித்த வேலை வாய்ப்பற்றவா்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

படித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சாா்பில் படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் செப். 30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில் படித்த வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் பதிவினை தொடா்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பதிவுசெய்து ஒரு வருடம் பூா்த்தி செய்திருத்தல் வேண்டும். தலித், பழங்குடியினா் பிரிவினருக்கு ஆக. 31 அன்று 45 வயதும், மற்றவா்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரா் பள்ளி, கல்லூரியில் நேரிடையாகப் படித்துக்கொண்டிருக்க கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் முதலிய தொழில்நுட்பப் பட்டம் பெற்றவா்கள் இவ் உதவித்தொகை பெறத் தகுதியற்றவா்கள்.

இவ் உதவித்தொகை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உடையவா்கள் விண்ணப்பப் படிவங்களை தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூா்த்தி செய்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கணக்குப் புத்தகம், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றிதழ்களுடன் வருகிற ஆக.31 வரை தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவு பெறாமல் 2022-2023-ஆம் நிதியாண்டுக்கு சுய உறுதி ஆவணம் அளிக்காதவா்கள் ஆக. 31-க்குள் சுய உறுதிமொழி ஆவணம் அளித்து தொடா்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT