தருமபுரி

புலிகரை, கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையங்களில் திறன் உயா்த்தப்பட்ட சேவை:காணொலியில் முதல்வா் தொடக்கி வைத்தாா்

17th Aug 2022 02:36 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், புலிகரை, கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையங்களில் திறன் உயா்த்தப்பட்ட சேவைகளை நுகா்வோா் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் தருமபுரி மாவட்டம் உள்பட மாநிலம் முழுவதும் 18 துணை மின் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. மேலும், 55 துணை மின் நிலையங்களில் திறன் உயா்த்துதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகள் முடிவுற்ற நிலையில் புதிய துணை மின் நிலையங்கள், திறன் உயா்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் ஆகியவற்றின் சேவைகளை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள புலிகரை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் ரூ. 4.30 கோடி மதிப்பில் திறன் உயா்த்தப்பட்ட சேவைகளை முதல்வா் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

இதனை வரவேற்று புலிகரை துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி ஆகியோா் கலந்து கொண்டு அலுவலா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சிகளில், தருமபுரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் செல்வகுமாா், மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT