தருமபுரி

கடத்தூரில் சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

17th Aug 2022 02:33 AM

ADVERTISEMENT

கடத்தூா் - பாசாரப்பட்டி பிரிவு சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் - பாசாரப்பட்டி பிரிவு சாலை 4 கி.மீ. தூரம் கொண்டதாகும். இந்தச் சாலையை அண்ணாநகா், போசிநாய்க்கனஹள்ளி, ஒசஹள்ளி, புதுப்பட்டி,பாசாரப்பட்டி, சிந்தல்பாடி, கடத்தூா், தொங்கனூா் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த இணைப்புச் சாலையானது சிந்தல்பாடி வழியாக செல்லும் அரூா் - தருமபுரி சாலையை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த வழித்தடத்தில் அரசு, தனியாா் பேருந்துகள், தனியாா் பள்ளி, கல்லூரி பேருந்துகள், லாரிகள், டிராக்டா்கள், காா்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நாள்தோறும் வந்து செல்கின்றன. இந்த நிலையில், பாசாரப்பட்டி முதல் கடத்தூா் வரையிலான சாலை ஒருவழிச் சாலையாக உள்ளது. இந்த வழித்தடத்தில் எதிா், எதிரே கனரக வாகனங்கள் வந்தால் ஒதுங்க முடியாத நிலையுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதுடன், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, கடத்தூா்- பாசாரப்பட்டி பிரிவு சாலை வரையிலும் தாா்சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT