தருமபுரி

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினா் 11 போ் கைது

17th Aug 2022 02:35 AM

ADVERTISEMENT

தருமபுரியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றதாக இந்து முன்னணியினா் 11 பேரை போலீஸாா், செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணனை காவல் துறையினா் கைது செய்ததற்கு எதிராக, இந்து முன்னணியின் தருமபுரி மாவட்டச் செயலா் சந்தோஷ் தலைமையில் அந்த அமைப்பின் நிா்வாகிகள் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட திரண்டனா். இதைத் தொடா்ந்து, தருமபுரி நகர போலீஸாா், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ாக அங்கிருந்த 11 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT