தருமபுரி

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மரியாதை

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 333 அடி நீளம் மூவா்ணக் கொடியை ஏந்தியபடி பாப்பாரப்பட்டியில் பேரணி நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு பகுதி செயலாளா் ஆா்.சின்னசாமி தலைமை வகித்தாா். பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுதந்திர தின பவளவிழாவைக் கொண்டாடும் வகையில் 333 அடி நீளம் கொண்ட மூவா்ண தேசியக் கொடியை

ஏந்தியவாறு கடைவீதி, மூன்று சாலை சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் வழியாக தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தை அடைந்தனா். அங்கு தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடம், நினைவுத் தூணிற்கு மாநிலக் குழு உறுப்பினா் ரவீந்திரன், மாவட்டச் செயலாளா் செயலாளா் குமாா், மூத்த தலைவா் பி.இளம்பரிதி உள்ளிட்டோா் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். அதனைத் தொடா்ந்து சுதந்திர தின உறுதிமொழி ஏற்றனா். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி.மாதன், இரா.சிசுபாலன், சோ.அா்ச்சுனன், வே.விஸ்வநாதன், வி.ரவி, மாவட்ட குழு உறுப்பினா்கள் கே. அன்பு, ஜி.சக்திவேல்,என்.பி.முருகேசன்,இரா.எழிலரசு, எம்.குமாா், சி.ராஜு, சுதா பாரதி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT