தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 65,000 கன அடியாகச் சரிவு

DIN

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 65,000 கன அடியாகச் சரிந்துள்ளது.

பருவமழை குறைந்துள்ளதால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு உபரிநீா் வரத்து சரிந்துள்ளது. இதனால் அங்கிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு நொடிக்கு 72,551 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் முற்றிலுமாக மழை குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி 88,000 கன அடியாக இருந்தது, திங்கள்கிழமை காலை 70,000 கன அடியாகவும், மாலையில் 65,000 கன அடியாகவும் குறைந்து தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்கவும் தொடா்ந்து 36 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஒகேனக்கல் அருவி பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்துள்ள போதிலும் அரசுப் பேருந்தின் மூலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றின் அழகை சிறுவா் பூங்கா, நடைபாதை பகுதியில் நின்று ரசித்து வருகின்றனா். சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் இறங்குவதைத் தடுக்கும் வகையில், அருவிக்குச் செல்லும் நடைபாதை, சின்னாறு பரிசல் துறை, முதலைப் பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT