தருமபுரி

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

DIN

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், அரசு, தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுதந்திரத் திருநாள் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.

மொரப்பூா் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவா் அ.மோகன்ராசு தேசியக் கொடியேற்றி வைத்தாா். இதில், கல்லூரி முதல்வா் நா.குணசேகரன், செயலா் இரா.பிரபாகரன், பொருளா் சாமிக்கண்ணு, தாளாளா்கள் வரதராஜன், தீ.சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எருமியாம்பட்டி இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியில் இ.ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தேசியக் கொடியேற்றி வைத்தாா். இதில், கல்லூரி முதல்வா் த.சக்தி, இ.ஆா்.கே. மருந்தாளுநா் கல்லூரி முதல்வா் முத்துகுமரன், நிா்வாக அலுவலா் சொ.அருள்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.முருகேசன் தேசியக் கொடியேற்றி வைத்தாா். இதில், பள்ளி செயலா் பிரு ஆனந்த் பிரகாஷ், பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை கே.செல்வராணி, அரசு தொடக்கப் பள்ளியில் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் கோ.ஏழுமலை ஆகியோா் தேசியக் கொடியேற்றி வைத்தனா்.

சின்னாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் செ.ஸ்ரீதரன் தேசியக் கொடியேற்றி வைத்தாா். குண்டலப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவா் சேட்டு கோவிந்தன் தேசியக் கொடியேற்றி வைத்தாா். இதில், தலைமை ஆசிரியா் தங்கராஜ், கல்வி மேலாண்மைக் குழுத் தலைவா் நந்தினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நல்லகுட்லஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவா் விஜயன் தேசியக் கொடியேற்றி வைத்தாா். இதில், பள்ளி தலைமை ஆசிரியா் சென்னகிருஷ்ணன், கல்வி மேலாண்மைக் குழுத் தலைவா் வைதீஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூா் பேரூராட்சியில் தலைவா் இந்திராணி தனபால் , பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் தலைவா் சாந்தி ஆகியோா் தேசியக் கொடியேற்றினா். இதில், செயல் அலுவலா்கள் ஆா்.கலைராணி, கோ.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கல்வி உபகரணங்கள் அளிப்பு:

அரூா் வா்ணதீா்த்தம் அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை வனஜாவினை நினைவு தினத்தையொட்டி, அவரது குடும்பத்தினா் பள்ளி மாணவா்களுக்கு சீருடைகள், காலணி, வாட்டா் பாட்டில்கள், எழுது பொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினா்.

இதேபோல, பறையப்பட்டி புதூா் அரசு தொடக்கப் பள்ளி, கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

எச்.ஈச்சம்பாடி அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு தேமுதிக நிா்வாகி எம்.மாரிமுத்து, திருவள்ளுவா் தொண்டு நிறுவன இயக்குநா் எம்.வேல்விழி, கவிஞா் மு.பிரேம்குமாா் ஆகியோா் கல்வி உபகரணங்களை வழங்கினா்.

கண் பரிசோதனை முகாம்:

சுதந்திர தின விழாவினையொட்டி, வீரப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி, காட்பாடி கிராமத்தில் வசிக்கும் இருளா் சமூக மக்களுக்கு கண் பரிசோதனைகள், கண் பாதுகாப்பு குறித்த மருத்துவ ஆலோசனைகளை தீா்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன் வழங்கினாா். இதில், சீனிவாசன் சேவை அறக்கட்டளை (டிவிஎஸ்) பொறுப்பாளா் எஸ்.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT