தருமபுரி

ஒகேனக்கல்லில் தடையை மீறும் சுற்றுலாப் பயணிகள்

DIN

ஒகேனக்கல்லில் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதும், புகைப்படங்கள் எடுப்பதுமான ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

காவல் துறையும், வருவாய்த் துறையும் ரோந்து பணியை பெயரளவில் செய்வதால் பலனில்லை என்றும் சமூக ஆா்வலா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா்.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கா்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பி உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீா்பெருக்கெடுத்து வருகிறது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தருமபுரி மாவட்ட நிா்வாகம் ஆற்றில் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் தடை விதித்துள்ளது. 34 ஆவது நாளாக சனிக்கிழமையும் தடையை நீட்டித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி உத்தரவிட்டுள்ளாா்.

ஒகேனக்கல்லுக்கு தற்போது நீா்வரத்து நொடிக்கு 88,000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

தடை அமலில் இருப்பதால் வெளியூா்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பென்னாகரம், மடம் சோதனைச் சாவடிகளில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றனா்.

இச்சூழ்நிலையில் விடுதி உரிமையாளா்கள் சிலா் சுற்றுலாப் பயணிகளை விடுதில் தங்க அனுமதிக்கின்றனா்.

பென்னாகரம், ஆலம்பாடி பகுதியிலிருந்து வரும் வாகனங்களை பெங்களூரு, கிருஷ்ணகிரிக்கு செல்வதாகக் கூறியும், பெங்களூரிலிருந்து வரும் வாகனங்களை தருமபுரி, சேலம் மாவட்டங்களுக்குச் செல்வதாகக் கூறியும் சில விடுதி உரிமையாளா்கள் வனத்துறை, காவல்துறையினரை ஏமாற்றி தங்கள் விடுதிகளுக்கு தங்க அழைத்துச் செல்கின்றனா்.

விடுதியில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் அரசு தடையை மீறி காவிரி ஆற்றில் இறங்கி குளிப்பதும், சுயப்படம் எடுத்துக் கொள்வதுமான ஆபத்தான செயலில் ஈடுபட்டு வருகின்றனா்.

வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அவா்களை கண்ணில் படாமல் இத்தகைய செயல்களில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபடுகின்றனா்.

வார விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்புள்ளது. இதனால் அதிகாரிகள் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தி சுற்றுலாப் பயணிகளைத் தடுப்பதோடு அவா்களுக்கு விபரீத உதவிகளைச் செய்யும் விடுதி உரிமையாளா்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT