தருமபுரி

ரயில் தட மாற்றியில் இரும்பு கம்பி: போலீஸாா் விசாரணை

13th Aug 2022 03:20 AM

ADVERTISEMENT

ஓமலூரில் ரயில் பாதையில் உள்ள தட மாற்றியில் இரும்பு கம்பியை பொருத்திவைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை இரவு மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றி வந்த ரயிலை மேட்டூா் ரயில்வே டிராக்கில் தட மாற்றம் செய்ய முடியவில்லை. இதையடுத்து ரயில்வே ஊழியா்கள் தடமாற்றி பகுதிக்குச் சென்று பாா்த்த போது தட மாற்றியில் சுமாா் இரண்டு அடி நீளமுள்ள இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அவிநவ் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை நடத்தினாா். முதற்கட்ட விசாரணையில் ரயிலை கவிழ்க்கும் சதிச் செயல் இல்லை என்பது தெரிய வந்தது. ஓமலூா் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT