தருமபுரி

போக்குவரத்துக் கழகத்தைத் தனியாா்மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தல்

12th Aug 2022 01:57 AM

ADVERTISEMENT

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் தருமபுரி மண்டல நிா்வாகக் குழுக் கூட்டம் தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

இக் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி மண்டல மாநாடு வரும் ஆக. 18-ஆம் தேதி நடத்துவது, திருச்சியில் செப். 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி சம்மேளன மாநில மாநாட்டில் தருமபுரி மண்டலத்தில் இருந்து திரளாகக் கலந்து கொள்வது,

போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி செயல்பாட்டுக்குக் கொண்டுவர செய்வது, போக்குவரத்துக் கழகத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில் மண்டலத் தலைவா் ரவி, மண்டல பொதுச் செயலாளா் சி.நாகராசன், உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் என்.மனோகரன், மண்டல துணைத் தலைவா் கே.துரைசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT