தருமபுரி

இந்து சமய அறநிலையத்துறை வாகனம் ஆக.29-இல் ஏலம்

12th Aug 2022 01:59 AM

ADVERTISEMENT

 

தருமபுரியில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலக வாகனம் வருகிற ஆக. 29-இல் பொது ஏலம் விடப்பட உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மா.உதயகுமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி, குமாரசாமிபேட்டை, செங்குந்தா் திருமண மண்டப வளாகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலக அரசு வாகன எண் டிஎன் 29 ஜி 0515 என்ற ஜீப் முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கழிவு செய்யப்பட்ட இந்த வாகனம் வரும் ஆக. 29 அன்று பிற்பகல் 3 மணியளவில், உதவி ஆணையா் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. எனவே, பொது ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் ஏலத்தில் விலைப்புள்ளியைக் கோரலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT