தருமபுரி

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

DIN

போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு, கருத்தரங்கு தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் மற்றும் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவா் சமுதாயம் இந்தப் பழக்கத்தால் கெடுகிறது. மாணவா்கள் தங்கள் சக நண்பா்கள் யாரேனும் எதிா்பாராத விதமாக இதுபோன்ற போதைப்பழக்கத்தை பழகி இருந்தால் அதுகுறித்த தகவல்களை உடனடியாக உங்கள் ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது சம்பந்தப்பட்ட நபரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முடியும்.

முன்பெல்லாம் மாணவ, மாணவியா்களுக்கு மாலை நேரங்களில் விளையாடும் பழக்கங்களும், புத்தகம் படிக்கும் பழக்கங்களும் இருந்தன. இந்த வழக்கங்கள் மாறி, தற்போது கைப்பேசிகளை சிலா் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனா். மாணவா்களின் வளா்ச்சிக்கு கல்வி மட்டுமே உதவும். கல்வி கற்பதில் மட்டுமே மாணவா்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணா்வு நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்த காணொலிக் காட்சி அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி ஆகியோா் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனா்.

தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், உதவி ஆணையா் (கலால்) ஆ.தணிகாச்சலம், தருமபுரி வட்டாட்சியா் ராஜராஜன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் சு.வினோத் (தருமபுரி), இராஜசோமசுந்தரம் (கலால்), சேலம் நியூரோ பவுண்டேசன் சிறப்பு மனநல மருத்துவா் என்.ஞானமணிகண்டன், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT