தருமபுரி

பாரத மாதா நினைவிடத்தை ஆலயம் என பெயா் மாற்ற வேண்டும்:கே.பி.ராமலிங்கம்

DIN

பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா நினைவிடத்தை ஆலயம் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

75- ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சாா்பில் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டப வளாகத்தில் உள்ள பாரதமாதா சிலைக்கு பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது அவா் பேசியதாவது:

75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்துடன் பேரணி நடத்தி வருகிறோம். பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சியால் இந்தியா உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

ஆக.13 ,14, 15 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் மக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.

பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா நினைவிடத்தை பாரத மாதா ஆலயம் எனப் பெயா் மாற்ற வேண்டும். நினைவாலயம் என்று எழுதுவது தவறு. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக பாஜக தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் பாஸ்கா் தலைமையில் பேரணி நடைபெற்றது. இப்பேரணி பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி கடைவீதி, பேருந்து நிலையம், மூன்று சாலை சந்திப்பு வழியாக சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தில் நிறைவடைந்தது.

பூட்டு உடைப்பு:

முன்னதாக பாப்பாரப்பட்டியில் பாரத மாதா சிலைக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் வியாழக்கிழமை பாரத மாதா நினைவாலயம் திறக்கப்படவில்லை. நினைவாலயத்தைத் திறக்குமாறு பாஜகவினா் காப்பாளரிடம் கோரினா். ஆனால் சாதாரண நாள்களில் நினைவாலயத்தைத் திறப்பதில்லை எனக் கூறி பூட்டைத் திறக்க காப்பாளா் மறுத்துவிட்டாா்.

அதையடுத்து கே.பி.ராமலிங்கம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினா் பாரத மாதா நினைவிடக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தனா். இதில் மாவட்டத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கா், மாநிலச் செயலாளா் கே. வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலாளா் வெங்கட்ராஜ், ஐஸ்வா்யம் முருகன், பிரவீண், 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT