தருமபுரி

ஆக. 15-இல் தருமபுரியில் 251 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

12th Aug 2022 10:44 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் 251 கிராம ஊராட்சிகளில் வருகிற ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் 251 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ஆக. 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள், கிராம சபைக் கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநா் நிலையிலும், இணை இயக்குநா் நிலையிலும் ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்ப்பட்டுள்ளனா்.

எனவே, இந்த கிராம சபைக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊராட்சியிலுள்ள வாக்காளா்கள், பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT