தருமபுரி

சுதந்திர தின விழா: 500 இடங்களில் தேசியக் கொடியேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு

12th Aug 2022 10:51 PM

ADVERTISEMENT

சுந்திர தின விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் 500 இடங்களில் தேசியக் கொடியேற்றிக் கொண்டாடுவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் தருமபுரி கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.மல்லிகா தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலா் அ.குமாா் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் 500 இடங்களில் தேசியக் கொடியேற்றி கொண்டாடுவது, விடுதலைப் போராட்ட வீரா்களை சிறப்பித்து கருத்தரங்குகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதேபோல, ஆக. 29-ஆம் தேதி முதல் செப். 5-ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் மேற்கொள்வது, மின் கட்டண உயா்வை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மின்வாரிய அலுவலகங்கள் முன்பு முறையீடு செய்வது, பாப்பாரப்பட்டி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா ஆலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற பாஜகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT