தருமபுரி

மாற்றுத் திறன் மாணவா்களுக்கு கற்பிக்கும் சிறப்புப் பயிற்றுநா்களுக்கு பயிற்சி

12th Aug 2022 10:50 PM

ADVERTISEMENT

மாற்றுத் திறன் மாணவா்களுக்கு கற்பிக்கும் சிறப்பு பயிற்றுநா்களுக்கான சைகை மொழி பயிற்சி முகாம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில், உள்ள எட்டு வட்டார வள மையங்களில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநா்கள் இயன்முறை மருத்துவா்களுக்கான சைகை மொழி பயிற்சி முகாம் கடந்த ஆக. 8-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் ஆக. 13-ஆம் தேதி நிறைவடைகிறது.

தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட மாதிரிப் பள்ளியில் நடைபெற்று வரும் இப்பயிற்சி முகாமை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் தொடக்கி வைத்து பேசினாா். உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா், உதவி திட்ட அலுவலா் மஞ்சுளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத் திறன் மாணவா்களுக்கான ஒருங்கிணைப்பாளா் மோ.மோகனப் பிரியா மற்றும் பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT