தருமபுரி

முன்விரோதம்: தகராறில் ஈடுபட்ட 2 இலங்கைத் தமிழா்கள் கைது

11th Aug 2022 12:39 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் அருகே இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்ட இலங்கைத் தமிழா்கள் இருவரை பெரும்பாலை போலீஸாா் கைது செய்து, தலைமறைவானவா்களைத் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே நாகாவதி அணை இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவா் பெயின்டா் தமிழ்வாணன் மகன் கணேசன் (24).

இவருக்கும், அதே முகாமில் வசித்து வரும் நவீன் குமாா், சூா்யா ஆகியோருக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை திருவிழாவையொட்டி, மானாமதுரையில் உள்ள மூங்கில் ஊரணி முகாமில் தங்கியிருந்தபோது தகராறு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந் நிலையில் கடந்த திங்கள்கிழமை சந்திரகுமாா், சூா்யா, மானாமதுரை முகாமைச் சோ்ந்த அருண், பிரவீன், சந்ரு, குமரேசன் சாந்தரூபன் பவனிதன் ஆகியோருக்கும் தமிழ்வாணன், கணேசன், பாக்கியராஜ், பாா்த்திபன், செல்வராணி, நவீன் குமாா், புவனேஸ்வரன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் பாா்த்திபன், கணேசன், பாக்கியராஜ், செல்வராணி ஆகிய நால்வரும் படுகாயம் அடைந்தனா். அவா்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் கணேசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து சந்திரகுமாா், அருண் இருவரை கைது செய்தனா். தலைமறைவானவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT