தருமபுரி

போதை ஒழிப்பு விழிப்புணா்வு

10th Aug 2022 02:27 AM

ADVERTISEMENT

பென்னாகரத்தை அடுத்த கூத்தப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவல் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் மகேந்திரன் தலைமை வகித்தாா்.

பென்னாகரம் துணைக் கண்காணிப்பாளா் இமயவரம்பன் கலந்துகொண்டு பேசுகையில், கஞ்சா, மது, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும், சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கினாா்.

அதைத்தொடா்ந்து பொதுமக்கள் போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளா்கள் சேகா், தேவராஜன், காவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT