தருமபுரி

சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

10th Aug 2022 02:30 AM

ADVERTISEMENT

தருமபுரி, சிப்காட் தொழிற்பேட்டைத் திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் நல்லம்பள்ளி வட்டார மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் இ.பி.புகழேந்தி மாநாட்டைத் துவக்கிவைத்து பேசினாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.பாா்த்தீபன், எஸ்.காசியம்மாள், ஆா்.முனுசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில், நல்லம்பள்ளி வட்டச் செயலாளராக க.மதன், துணைச் செயலாளா்களாக சி.லட்சுமி, ஆா்.முனுசாமி, பொருளாளராக ஆறுமுகம் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த மாநாட்டில், தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை விரைந்து தொடங்கி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரவேண்டும். காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

ADVERTISEMENT

தகுதியுள்ள அனைவருக்கும் முதியோா் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நல்லம்பள்ளி அருகே உள்ள சமத்துவபுரத்தில் பழுதான நிலையில் உள்ள வீடுகளைப் பழுது நீக்க நிதியுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT