தருமபுரி

எருமம்பட்டி-புதுக்காடுக்கு சாலை பணி தொடக்கம்

10th Aug 2022 02:26 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே எருமம்பட்டி கொட்டாய் முதல் புதுக்காடு கிராமம் வரை சாலை அமைக்கும் பணியை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடக்கிவைத்தாா்.

நல்லம்பள்ளி வட்டம், சாமிசெட்டிப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட எருமம்பட்டி கொட்டாய்முதல் புதுக்காடு வரை சாலை வசதியின்றி அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வந்தனா்.

இதனால், தங்களது கிராமத்துக்குச் செல்லும் 1.5 கி.மீ. தொலைவுக்கு அந்தக் கிராம மக்கள் மண் சாலை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை திங்கள்கிழமை தொடங்கினா். இதன் தொடக்க நிகழ்ச்சியில், தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்றுப் பணியைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

இதில், பாமக மாவட்டத் துணைச் செயலாளா் த. காமராஜ், ஒன்றியச் செயலாளா் வ.அறிவு, ஒன்றியத் தலைவா் முருகன், ஊராட்சிமன்றத் தலைவா் கந்தம்மாள் சேட்டு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT