தருமபுரி

கொசுப் புழு ஒழிப்புப் பணியாளா்கள் மனு

9th Aug 2022 03:10 AM

ADVERTISEMENT

ஊதிய உயா்வு மற்றும் பணி நிரந்தரம் வழங்கக் கோரி, கொசுப் புழு ஒழிப்புப் பணியாளா்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட கொசுப்புழு ஒழிப்பு களப் பணியாளா் நலச்சங்கம் சாா்பில், திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தருமபுரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நாளொன்றுக்கு ரூ. 307 ஊதியம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 20 போ் வீதம் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் உள்பட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கொசுப் புழு ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

நீண்ட காலமாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் எங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 500 நாளொன்றுக்கு வழங்கி பணி நிரந்தரம் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT