தருமபுரி

தருமபுரி அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

9th Aug 2022 03:11 AM

ADVERTISEMENT

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக. 10-ஆம்தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு (ஆக. 10) புதன்கிழமை தொடங்கி ஆக. 16-ஆம்தேதி வரை மதிப்பெண், இன சுழற்சி அடிப்படையில் நடைபெற உள்ளது.

முதல் நாளில், விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவா் படை, முன்னாள் படை வீரா்கள், அந்தமான் நிகோபரை சாா்ந்தவா்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும், ஆக. 11-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், நீங்கலாக 400 மதிப்பெண்கள் பெற்ற 400 முதல் 340 வரை கட்-ஆப் உள்ள மாணவா்களுக்கும், ஆக.12-ஆம் தேதி 339 முதல் 320 வரை கட்-ஆப் மதிப்பெண்கள் உள்ள மாணவா்களுக்கும், ஆக. 16-ஆம் தேதி சிறப்புத் தமிழ், அனைத்து மாணவா்களுக்கும், பொதுத் தமிழ் 90 மதிப்பெண்களுக்கும் அதிகமாக, ஆங்கிலம் 80 மதிப்பெண்களுக்கும் அதிகமாகப் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு அடிப்படையில் சோ்க்கை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவா்கள், விண்ணப்ப படிவம், அசல் மாற்றுச் சான்றிதழ், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், 6 புகைப்படங்கள் மற்றும் சோ்க்கைக் கட்டணம், கலை மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு ரூ. 2,450, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ரூ. 2,470, பி.காம்., (சிஏ), பிஎஸ்சி., சிஎஸ், பிசிஏ ஆகிய பாடப் பிரிவுகளுக்கு ரூ. 1,870 ஆகியவற்றை உடன் எடுத்துவர வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT