தருமபுரி

காவிரி மிகைநீா்த் திட்டத்தை செயல்படுத்த பாஜக வலியுறுத்தல்

9th Aug 2022 03:13 AM

ADVERTISEMENT

காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட பாஜக தலைவா், முன்னாள் எம்எல்ஏ அ.பாஸ்கா், திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியில் மழைக் காலங்களில் மிகையாகச் சென்று கடலில் கலக்கும் நீரை, நீா் ஏற்றும் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

இதன்மூலம், மாவட்டத்தில் வட நிலையில் உள்ள ஏரிகளுக்கு நீா்வரத்து கிடைக்கும். ஆண்டு முழுவதும் மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT