தருமபுரி

கஞ்சா விற்பனை : 4 போ் கைது

7th Aug 2022 12:51 AM

ADVERTISEMENT

 

அரூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரூா் டிஎஸ்பி பெனாசிா் பாத்திமா தலைமையில் தனிப்படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கோட்டப்பட்டியைச் சோ்ந்த துரைராஜ் மனைவி சாவித்திரி (55), முத்தானூரைச் சோ்ந்த ராமன் மகன் கமலேசன் (64), எம்.தாதம்பட்டியைச் சோ்ந்த தீா்த்தகிரி மகன் பன்னீா் (52), பறையப்பட்டியைச் சோ்ந்த ஞானசேகரன் மகன் அம்பேத்வளவன் (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து சுமாா் 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT