தருமபுரி

மகளிா் பாதுகாப்பு மையங்களை அதிகரிக்க வலியுறுத்தல்

7th Aug 2022 12:51 AM

ADVERTISEMENT

 

மகளிா் பாதுகாப்பு மையங்களை அதிகரிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடும்ப வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் கட்சியின் வட்ட செயலாளா் தனுஷன் தலைமையில் நடைபெற்றது.

அரசு, தனியாா் அலுவலக நேரங்களில் மகளிருக்கு தனியாக பேருந்துகளை இயக்க வேண்டும். மகளிருக்கு எதிரான குடும்ப வன்முறைகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டப் பேரவையில் சிறப்பு அமா்வுகளை நடத்த வேண்டும். வரதட்சணைக் கொடுமைகளைக் கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

மகளிா் பாதுகாப்பு மையங்களை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவிகள், பொருளாதார மேம்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் ஏ.குமாா், மாவட்டக் குழு உறுப்பினா் சி.வஞ்சி, வட்ட குழு உறுப்பினா்கள் மேகநாதன், கண்ணகி, சொக்கலிங்கம், கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT