தருமபுரி

நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டவா் மீது கொலைவெறித் தாக்குதல் 4 போ் கைது

7th Aug 2022 11:26 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிர மாநிலம், அகமது நகா் மாவட்டத்தில் பாஜகவைச் சோ்ந்த நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட 23 வயது இளைஞரை ஒரு கும்பல் கூா்மையான ஆயுதங்களால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தாா்; ஆக. 4ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில் தொடா்புடைய 4 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

முகமது நபிக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டதற்காக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். சமூக வலைதளங்களில் நூபுா் சா்மாவுக்கு ஆதரவாகப் பதிவிட்ட கன்னையா லால் என்பவா் கடந்த ஜூன் மாதம் உதய்ப்பூரில் 2 முஸ்லிம்களால் கொல்லப்பட்டாா்.

இந்நிலையில் அகமது நகா் மாவட்டம், கா்ஜத் நகரைச் சோ்ந்த பிரதிக் என்கிற சன்னி ராஜேந்திர பவாா் (23) என்பவரும், அவரது நண்பா் அமித் மானே என்பவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றனா். அங்குள்ள அக்கபாய் சௌக்கில் உள்ள ஒரு மருந்துக் கடை முன்பு நண்பா் ஒருவரின் வருகைக்காக இருவரும் காத்திருந்தனா். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்தவா்களின் கையில் வாள், அரிவாள், ஹாக்கி மட்டை போன்ற ஆயுதங்கள் இருந்தன.

ADVERTISEMENT

அந்தக் கும்பலில் இருந்த ஒரு நபா் பவாரை நோக்கி, நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் பதிவிட்டவா் இவா்தான் என்று கூச்சலிட்டவாறு ராஜேந்திர பவாரை தாக்கத் தொடங்கினாா். அவரைத் தொடா்ந்து 14 போ் கொண்ட அந்த கும்பல் இருவரையும் கூரான ஆயுதங்களால் தாக்கியது.

மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தில் நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட கால்நடை மருந்தக உரிமையாளா் உமேஷ் கோலே கொல்லப்பட்டதைப் போன்ற கதிதான் உனக்கும் ஏற்படும் எனக் கூறியபடி கடுமையாக தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த ராஜேந்திர பவாரும், அமித் மானேவும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டனா்.

விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், தாக்குதலின் உள்நோக்கம் குறித்து எதையும் முன்கூட்டியே கூற முடியாது என காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘இதுவரை நடைபெற்ற விசாரணையில், நூபுா் ஷா்மாவை ஆதரித்து ராஜேந்திர பவாா் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவை நாங்கள் பாா்க்கவில்லை. அவரது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.

ராஜேந்திர பவாருக்கு ஏற்கெனவே ஒரு குழு உறுப்பினா்களுடன் முன்விரோதம் இருந்தது. அதன் காரணமாகவும் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கக் கூடும். இருப்பினும், இது தொடா்பாக தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இந்நிலையில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸாா் 4 பேரை கைது செய்துள்ளனா்.

கண்டனம்:

இச்சம்பவத்துக்கு பாஜக எம்எல்ஏ நித்தேஷ் ராணே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT