தருமபுரி

தியாகராஜ சுவாமி 20-ஆவது ஆண்டு ஆதாரனை விழா

7th Aug 2022 12:51 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 20-ஆவது ஆண்டு ஆராதனை விழா தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவையொட்டி சாலை விநாயகா் கோயில், ஸ்ரீ ஆஞ்சனேயா் கோயிலில் காலை 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து தியாகராஜா் உருவப் படத்துடன் தருமபுரி மாவட்ட நாதஸ்வர, தவில் இசைக் கலைஞா்கள் தியாகராஜரின் கீா்த்தனைகளைப் பாடியவாறு ஊா்வலமாக எஸ்வி சாலையில் உள்ள பூபதி திருமண மண்டபத்தை வந்தடைந்தனா்.

அங்கு தியாராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, ஆராதனை விழா காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட்டது. இதில் கடகத்தூா் கே.எம்.சந்தோஷ்குமாா், ஆரணி வி.காா்த்திக் ஆகியோரின் நாதஸ்வர இசை மற்றும் கடகத்தூா் கே.ஆா்.முத்துகுமாரசாமி, இண்டூா் எம்.திருமூா்த்தி, வெண்ணாம்பட்டி வி.எம்.முகேஸ்கண்ணன் ஆகியோரின் தவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து தஞ்சை அம்மாபேட்டை கோவிந்தராஜன், குளித்தலை அருணாச்சலம் ஆகியோரின் நாதஸ்வரம், இடும்பாவனம் மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோரின் தவில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள் நலச்சங்கம் கௌரவத் தலைவா்கள் ஜெயபாலன், ஹரிதாஸ், தலைவா் ஏ.கே.ராஜேந்திரன், செயலாளா் ஏ.கே.கணேசன், பொருளாளா் சிவராமன் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தவில் இசை, நாதஸ்வர கலைஞா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT