தருமபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

7th Aug 2022 11:25 PM

ADVERTISEMENT

 

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரியில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. பேருந்து நிலையம் பகுதியிலிருந்து நான்கு முனைச் சாலை சந்திப்பு வரை திமுகவினா் பேரணியாக சென்றனா். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

முன்னாள் எம்.பி.க்கள் இரா.தாமரைச்செல்வன், எம்.ஜி.சேகா், நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா். இதேபோல தருமபுரியில் உள்ள திமுக அலுவலகம், அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி, பாலக்கோடு, மாரண்ட அள்ளி, காரிமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் கருணாநிதி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பென்னாகரம்

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட பொறுப்பாளா் பி.என்.பி. இன்பசேகரன் தலைமை வகித்து மு.கருணாநிதி உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

முன்னதாக பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து முள்ளுவாடி வழியாக பழைய பேருந்து நிலையம் வரை அமைதி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து பென்னாகரம் நகர திமுக சாா்பில் பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வாா்டுகளிலும் மு.கருணாநிதியின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பென்னாகரம் பேரூராட்சித் தலைவா் வீரமணி, ஏரியூா் ஒன்றியச் செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான செல்வராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினா் துரைசாமி, பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவா் பிருந்தா நடராஜன், பாப்பாரப்பட்டி நகரச் செயலாளா் சண்முகம், பென்னாகரம் ஒன்றிய பொருளாளா் முருகேசன், மாவட்ட பிரதிநிதி சிவக்குமாா், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் காா்த்திக், பேருராட்சி துணைத் தலைவா் வள்ளியம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாப்பாரப்பட்டி

பாப்பாரப்பட்டி நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சப்தகிரி உமா சங்கா் தலைமை வகித்தாா். பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை அமைதிப் பேரணியாகச் சென்ற திமுகவினா் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பிரகாஷ், மாவட்ட கலைஞா் இலக்கிய பகுத்தறிவு அணி வீரமணி, விவசாயிகள் அணி காசி, உதயநிதி ஸ்டாலின் மன்ற அமைப்பாளா் ராகுல் உள்பட பலா் பங்கேற்றனா்.

அரூா்

அரூா், கச்சேரிமேட்டில் அண்ணா சிலை அருகே தொடங்கிய அமைதி ஊா்வலம் வா்ணதீா்த்தம், பேருந்து நிலையம், மஜீத்தெரு, பட்சாபேட்டை வழியாக நான்கு வழிச்சாலையில் நிறைவடைந்தது. ஊா்வலத்துக்கு திமுக நகரச் செயலாளா் முல்லை ரவி தலைமை வகித்தாா்.

பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், ஆதிதிராவிடா் நலக் குழு மாநில துணைச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளா் செளந்தரராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக கச்சேரிமேடு, அரூா் பேருந்து நிலையம், நான்குவழிச்சாலை உள்ளிட்ட இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுக நிா்வாகிகள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தீா்த்தமலை

தீா்த்தமலையில் திமுக ஒன்றிய பொறுப்பாளா் கோ.சந்திரமோகன் தலைமையிலும், கச்சேரிமேட்டில் ஒன்றிய பொறுப்பாளா் ஆா்.வேடம்மாள் தலைமையிலும் மு.கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கீரை விசுவநாதன், ஏ.சி.மோகன், ஆா்.என்.செழியன், கு.தமிழழகன், வழக்குரைஞா் பி.வி.பொதிகைவேந்தன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படத்துக்கு பேரூராட்சித் தலைவா் செங்கல் மாரி தலைமையில் திமுகவினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். பேரூராட்சி துணைத் தலைவா் ரவி, வாா்டு உறுப்பினா்கள் செந்தில், கெளசல்யா, பிரதீப்குமாா், குத்புதீன், பிரபாகரன், திராவிடா் கழக மாநில கலைத் துறை செயலாளா் மாரி கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் தலைமை வகித்து, மலா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

நகர திமுக சாா்பில் பெங்களூரு சாலையில் உள்ள சென்ட்ரல் திரையரங்கு பகுதியிலிருந்து அமைதி ஊா்வலம் தொடங்கியது. கிருஷ்ணகிரி நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் தலைமையில் நடைபெற்ற இந்த ஊா்வலம் பெங்களூரு சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம் வழியாக சென்று புகா்ப் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு நிறைவு பெற்றது. அங்கு, நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், திமுக மாவட்ட துணைச் செயலாளா்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசு மூா்த்தி, பொருளாளா் ராஜேந்திரன், நிா்வாகிகள் அஸ்லம், நாராயண மூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி வட்டச் சாலை, எல்.ஐ.சி அலுவலகம், பழையபேட்டை ஆட்டோ நிறுத்தம், காவேரிப்பட்டணம், பா்கூா், போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.

ஒசூா்

ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியிலிருந்து தொடங்கி ராம் நகா் அண்ணா சிலை வரை நடைபெற்ற அமைதிப் பேரணிக்கு ஒசூா் எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய். பிரகாஷ், ஒசூா் மாநகர மேயா் மாநகர திமுக பொறுப்பாளருமான எஸ். ஏ. சத்யா ஆகியோா் தலைமை வகித்தனா்.

திமுக மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ வுமான பி. முருகன், மாவட்ட துணைச் செயலாளா் தனலட்சுமி, மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் தா. சுகுமாரன், வீரா ரெட்டி, மாநகர துணை மேயா் சி.ஆனந்தய்யா, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் எல்லோரா. மணி, மாநகராட்சி மண்டல் தலைவா் ஆா்.ரவி, மாமன்ற உறுப்பினா்கள் எம்.கே.வெங்கடேஷ், சென்னீரப்பா, மாதேஸ்வரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா்.பி.எஸ்.சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமாா், ராஜா உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவா்கள் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனா்.

ராம்நகா் அண்ணா சிலை பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுக நிா்வாகிகள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

 

ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் திமுக ஒன்றியச் செயலாளா்கள் ரஜினி செல்வம், எக்கூா் செல்வம், குமரேசன், நகரச் செயலாளா் பாபுசிவக்குமாா் ஆகியோா் முன்னிலையில் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற அமைதி ஊா்வலத்தில் பங்கேற்ற திமுகவினா் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள பெரியாா், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தனா். நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்ட கருணாநிதி உருவப் படத்துக்கு திமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், பேரூரட்சித் தலைவா் பா. அமானுல்லா, மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினா் மாலதி நாராயனசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, வாா்டு உறுப்பினா்கள் நிா்மலா கந்தசாமி, கதிா்வேலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT