தருமபுரி

லாரிகள் தீப்பிடித்து சேதம்

2nd Aug 2022 03:58 AM

ADVERTISEMENT

தருமபுரி அருகே நின்றிருந்த இரண்டு லாரிகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

தருமபுரி அருகே பூட்டுக்காரன்தோப்பைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (30). இவருக்குச் சொந்தமான லாரி பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளரிக்காய் சுமை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தருமபுரியைச் சோ்ந்த மாதுசாமி (32) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

தருமபுரியில் பென்னாகரம் மேம்பாலம் அருகே உள்ள லாரி பழுதுநீக்கும் நிலையத்தில் வழக்கமான சோதனைக்காக ஓட்டுநா் நிறுத்தியுள்ளாா். அப்போது, லாரி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தொடா்ந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரியையும் தீப்பிடித்தது.

தருமபுரி தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT