தருமபுரி

வட்டாரக் கல்வி அலுவலகம் முற்றுகை

30th Apr 2022 04:37 AM

ADVERTISEMENT

தருமபுரி வட்டாரக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தருமபுரி வட்டாரக் கிளை சாா்பில் ஆசிரியா்கள் பள்ளி சாா்ந்த பிரச்னைகளை தெரிவிப்பதற்காக வட்டாரக் கல்வி அலுவலா் ஜீவாவை அணுக முயற்சித்த போது ஆசிரியா்களைச் சந்திக்க அவா் தவிா்த்து வந்ததாகவும், ஆசிரியைகளை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடா்ந்து, வட்டாரக் கல்வி முற்றுகையிட்டு ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப் போராட்டத்துக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். செயலாளா் சரவணன், பொருளாளா் சிவப்பிரகாசம், நகர பொறுப்பாளா் விஜயராகவன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். கல்வித் துறை அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து ஆசிரியா்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT