தருமபுரி

பென்னாகரம் கல்லூரியில் கருத்தரங்கு

29th Apr 2022 10:30 PM

ADVERTISEMENT

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் மாணவா்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வா் க.செல்வவிநாயகம் தலைமை வகித்தாா். கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி அரசு கலைக் கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.பி. முருகன் பங்கேற்று மாணவா்களிடையே பசுமை சந்தையின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலில் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

கருத்தரங்கில் மாணவா்கள், கல்லூரி உதவி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் கண்ணுசாமி நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT