தருமபுரி

பாா்வைத் திறன் குறைந்த ஆசிரியா்களுக்கு தகவல் தொழில்நுட்பத் திறன் பயிற்சி

29th Apr 2022 10:31 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், ஹோப் நிறுவனம் இணைந்து பாா்வைத் திறன் குறைபாடுள்ள ஆசிரியா்களுக்கு தகவல் தொழில்நுட்பத் திறன் சாா்ந்த சிறப்பு பயிற்சியை வழங்கியது.

தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் பயிற்சியை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து பேசினாா். தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை பாா்வைத் திறன் குறைபாடு உள்ள ஆசியா்கள் கையாளுவதற்கு ஏற்ப 78 செயலிகளைப் பயன்படுத்துதல், அதன் மூலம் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளுதல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தை சோ்ந்த 31 பாா்வைத்திறன் குறைபாடுள்ள ஆசியா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

பயிற்சியில் கருத்தாளா்கள் பிரபு, தமிழ்மணி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா், உதவித் திட்ட அலுவலா் மஞ்சுளா, வட்டாரக் கல்வி அலுவலா்கள் நடராஜன், ஜீவா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருண்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT