தருமபுரி

கள் மீதான தடையை நீக்க வேண்டும்: செ.நல்லசாமி

29th Apr 2022 10:29 PM

ADVERTISEMENT

கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி வலியுறுத்தினாா்.

தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரியை ஆண்ட மன்னா் அதியமான், தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு கிடைப்பதற்கரிய நெல்லிக்கனியை வழங்கியதற்கான சான்றாக தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, மன்னா் அதியமான் ஔவையாருக்கு கள் வழங்கியதாக புானூறு கூறுகிறது. எனவே, இதனை நினைவுப்படுத்தும் வகையில் தருமபுரியில் சிலைகள் அமைக்க வேண்டும்.

கள் என்பது ஒரு உணவுப் பொருள்; அது போதைப்பொருள் அல்ல. எனவே, தனி மனிதனுக்கு உணவு தேடும் உரிமையை அரசியலைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. தற்போது கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை என்பது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது.

ADVERTISEMENT

எனவே, கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். கள் இறக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி, விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், தமிழகத்தின் பொருளாதாரம் மேலும் மேம்படும் என்பதால் அரசு விரைந்து கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT