தருமபுரி

ஒகேனக்கல், ஏரியூா் சாலைகளை அகலப்படுத்தும் பணி: எம்எல்ஏ ஜி.கே.மணி கோரிக்கை

28th Apr 2022 11:21 PM

ADVERTISEMENT

தருமபுரி-ஒகேனக்கல் சாலை, ஏரியூா்-பழையூா் சாலைகளை அகலப்படுத்தும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி பேரவையில் வேண்டுகோள் விடுத்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது

பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி பேசியதாவது:

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு அதிகம் போ் வந்துசெல்கின்றனா். ஒகேனக்கல் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி பாதியில் நிற்கிறது. எனவே தருமபுரியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.

ADVERTISEMENT

அதுபோல ஏரியூா் பகுதியிலிருந்து பழையூா் பகுதிக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் குறுகலான மலைப் பகுதியைக் கொண்ட சாலையாக உள்ளதால் அதிக அளவில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே தருமபுரி- ஒகேனக்கல் சாலை, ஏரியூா் - பழையூா் செல்லும் சாலைகளை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்க அரசு முன்வர வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறியதாவது:

பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ கூறிய சாலைகளில் அதிக அளவில் பயணித்துள்ளேன்.

ஒகேனக்கல் குடிநீா் திட்டப் பணிகளின்போது அந்தச் சாலைகளில் தமிழக முதல்வரும் அதிக அளவில் பயணித்தது ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டம் நிறைவேற ஒரு காரணமாக இருந்தது.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் செல்லக்கூடிய சாலையை அகலப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

அந்தச் சாலை வனத்துறைக்குச் சொந்தமானதாக இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டுமா? அல்லது நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமாக நிலம் உள்ளதா என ஆராய்ந்து, அந்தச் சாலையை விரிவுபடுத்த நிகழ் ஆண்டிலேயே முயற்சிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT