தருமபுரி

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு விழிப்புணா்வுப் பேரணி

28th Apr 2022 04:32 AM

ADVERTISEMENT

 

தருமபுரி: தருமபுரியில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம் தொடா்பாக விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி வட்டார வள மையம் சாா்பில், பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலான மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு வரும் ஏப். 30-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இலவச மருத்துவ முகாம் ஔவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் அடையாள அட்டை, உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

இம் முகாமில் அனைத்து மாற்றுத் திறனாளி மாணவா்களை பங்கேற்க செய்யும் வகையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சாா்பில் இவ் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT

நகராட்சி உயா்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து துவங்கிய இப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில், ஆசிரியா் பயிற்றுநா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT