தருமபுரி

பென்னாகரத்தில் உலக புத்தக விழா

24th Apr 2022 06:02 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் அருகே மருதம் நெல்லி இலக்கியப் பேரவை சாா்பில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.

பென்னாகரம் அருகே ஏரியூா் அடுத்துள்ள ராமகொண்ட அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் மருதம் நெல்லி இலக்கியப் பேரவை சாா்பில் நடைபெற்ற உலக புத்தக தின விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா்

மு.தமிழ்ச் செல்வி தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

மாணவா்களுக்கு ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறைத் தலைவா் மற்றும் மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவையின் பொறுப்பாளருமான நாகராஜன் இலவசமாக திருக்குறள் புத்தகங்களை வழங்கினாா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT