தருமபுரி நகரில் மொத்த விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தருமபுரி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆறுமுகம் தெரு, அப்துல் முஜிப் தெரு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுவா்கள் உட்கொள்ளும் சாக்லெட் உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பனை செய்யும் மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ஏ.பானு சுஜாதா மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், குமணன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வில், சிறுவா்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. இதேபோல காலவதியான உணவு பொருள்கள் விற்பனை செய்த மூன்று கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ADVERTISEMENT